சினிமா செய்திகள் நடிகர்

கட்சி தொடங்க இன்னும் நேரம் கைகூடவில்லை – ரஜினி பேச்சு

காலா பட இசை வெளியீடு விழா சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது,இது ஆடியோ வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை படத்தின் வெற்றி விழா போல் தெரிகிறது.

நான் முடிந்துவிட்டேன் என 40 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.மக்களும், கடவுளும் என்னை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

என் வாழ்க்கையின் கனவுகளில் ஒன்று நதி இணைப்பு,தென்னிந்திய நதிகளை இணைத்த பின் நான் கண்ணை மூடினாலும் பரவாயில்லை. தண்ணீர் பிரச்னை என்றால் என்னை அறியாமலும் ஆர்வம் வந்துவிடுகிறது. கங்கை நதியை பார்ப்பதற்காகவே நான் இமயமலை செல்கிறேன்.

என்னுடைய சிவாஜி படவிழாவுக்கு வருகை தந்து பேசினார் கருணாநிதி. 75 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கும் கருணாநிதியின் குரலை கேட்க ஆவலாக இருக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.

புத்திசாலியுடன் பழகலாம்; அதிபுத்திசாலியுடன் பழகக்கூடாது. நல்லவனாக இருக்கலாம்; மிகவும் நல்லவனாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கோழை. யார் என்ன சொன்னாலும் நான் என் பாதையில் தொடர்ந்து செல்வேன்.

காலா படத்தில் அரசியல் இருக்கிறது. ஆனால் காலா அரசியல் படமல்ல. அரசியல் பேசுகிற கடமை இருப்பினும் சரியான நேரம் இன்னும் கைகூடவில்லை. நல்ல நேரம் வரும். தமிழகத்திற்கு நல்ல காலம் பிறக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts