அனிருத் காவ்யாமாறன் திருமணம் உறுதியானது – புதியதகவல்
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத்,தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சிக் குழுமமான சன் குழும அதிபர் கலாநிதிமாறனின் மகளும்,சன் ரைசர்ஸ் மட்டைப்பந்து அணியின் உரிமையாளருமானவர் காவ்யா மாறன்.இவ்விருவரும் காதலித்து வருகிறார்கள்.இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்று சில ஆண்டுகளாகவே சொல்லப்பட்டுவருகிறது.
ஆனால்,சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொரு முறையும் அதை மறுத்தே வந்தனர்.
கடந்த ஆண்டு இதேபோல் இந்தச்செய்தி வேகமாகப் பரவியது.அவற்றிற்குப் பதிலளிக்கும் விதமாக,திருமணம் ஆ? ஹாஹா.. சில்லா இருங்க கய்ஸ், தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீங்க ப்ளீஸ் என்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டார் அனிருத்.
அதன்பின் அந்தச் செய்தி அப்படியே அமுங்கிப் போனது.அது அப்போதைக்குத்தான்.மீண்டும் இவ்வாண்டு தொடக்கத்திலேயே அந்தச் செய்தி மறுபடி அடிபட்டது.
இவ்வாண்டுக்குள் அனிருத் காவ்யாமாறன் திருமணம் நிச்சயமாக நடந்துவிடும் என்கிற தகவல் பரவத் தொடங்கியது.அதி கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
சில ஆண்டுகளாகவே இதுபற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும் அனிருத் குடும்பத்தினர் அவருடைய ஜாதகப்படியே திருமணம் நடக்கவேண்டும் என்று விரும்பினார்கள்.அதனால் உரிய காலத்துக்காகக் காத்திருந்தனர்.இப்போது காலம் கனிந்துவிட்டது.
எனவே,திருமணம் குறித்த பேச்சுகளைத் தொடங்கிவிட்டனர்.
இப்போதைய நிலவரப்படி இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் அனிருத் காவ்யாமாறன் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதோடு இன்னொரு ஆச்சரிய தகவலும் சொல்லப்படுகிறது.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற நாடு ஸ்பெயின்.
அந்நாட்டில்தான் இவர்கள் திருமணம் நடக்கவிருக்கிறது என்பதுதான் அந்த ஆச்சரிய தகவல்.
அந்நாட்டில்,நிறைய தீவுக்கூட்டங்கள்ள் இருப்பதாகவும்,பலேரிக் தீவுக்கூட்டங்கள் என்றழைக்கப்படும் அதிலொரு தீவான மல்லோர்கா எனும் தீவில் இவர்களுடைய திருமணம் நடக்கவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மிகச்சிலரை மட்டும் அழைத்து அங்கு திருமணம் நடத்த ஏண்ணியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.திருமணம் முடிந்து சில நாட்களில்,சென்னையில் திருமண வரவேற்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
பல ஆண்டுகளாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசப்பட்டுவரும் இந்தத் திருமணச் செய்தி இவ்வாண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவரவிருக்கிறது என்று அவ்விரண்டு குடும்பத்தார் தரப்பிலும் நெருங்கியோர் வட்டத்தில் சொல்லப்படும் தகவலாக இருக்கிறது.
எனவே,விரைவில் அனிருத் காவ்யாமாறன் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.











