மீண்டும் நடக்கும் அயலான் படப்பிடிப்பு – புதியதகவல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி நவம்பர் பத்தாம்தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்தப்படம் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொரோனா மற்றும் சில சிக்கல்களால் தாமதமானது. படப்பிடிப்பு முடிவடைந்த பின்பும் 4500 க்கும் மேற்பட்ட வி எஃப் எக்ஸ் காட்சிகள் இருப்பதால் அதைச் செய்யப் பல மாதங்கள் பிடிக்கும் என்பதால் மேலும் தாமதமாகிக் கொண்டிருந்தது.
அதோடு அந்த வி எஃப் எக்ஸ் காட்சிகளுக்காக சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருந்ததாம்.
அதற்கான படப்பிடிப்பும் தற்போது நடந்துகொண்டிருக்கிறது.
சுமார் ஏழெட்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டிய தேவை இருந்ததாம்.அதற்காக, சென்னை மாநகரின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
நடிகர்கள் யாருமின்றி இடங்கள், கட்டிடங்கள், நேப்பியர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
இதன்மூலம் அயலான் தொடர்பான அனைத்து வேலைகளும் முழுமையடைந்திருக்கின்றன.
இதனால் அறிவித்தபடி தீபாவளியையொட்டி படம் வெளியாகும் என்பது உறுதியாகியிருக்கிறது.
இவ்வாண்டு தீபாவளியையொட்டி அயலான் மட்டுமின்றி கார்த்தியின் ஜப்பான் கார்த்திக்சுப்புராஜின் ஜிகர்தண்டா 2 ஆகிய படங்களும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ஒரேநாளில் மூன்று படங்கள் வெளியானால் மூன்றுக்குமே குறைவான திரையரங்குகள் கிடைக்கும் என்பதால் மூன்றில் ஒன்று வராது குறிப்பாக அயலான் தாமதமாகலாம் என்று சொல்லப்பட்டது.
ஆனால் அயலான் பட வேலைகளில் பாக்கியாக இருந்த படப்பிடிப்பும் நடந்துள்ளதால் திட்டமிட்டபடி வெளியாகும் என்பது உறுதியாகியிருக்கிறது.











