சினிமா செய்திகள்

கபிலனின் வரிகளும் பிரியங்காவின் குரலும் – யுவதிகளைக் கவரும் பிசாசு 2 பாடல்

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய்சேதுபதி உட்பட பலர் நடிக்கும் படம் பிசாசு 2. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடல் காணொலி நேற்று வெளியானது.

கார்த்திக் ராஜா இசையில், நெஞ்சை கேளு என்று தொடங்கும் அந்தப்பாடலை கபிலன் எழுதியுள்ளார்.

நெஞ்சை கேளு அது சொல்லும்
உறவென்ன வழித்துணையா
கண்ணைக் கேளு அதுசொல்லும்
இரவென்ன இவள் துணையா

என் ஒரு பெண்ணின் சோகத்தைப் பிழிந்து கொடுக்கும் கபிலனின் வரிகளுக்குத் தன் காந்தக்குரலால் பலம் சேர்த்திருக்கிறார் என்.கே.பிரியங்கா.

அவருடைய குரலில்,

முள்ளோடு கல்லோடு
தினந்தோறும் நடந்தேன்
விழிதேடும் முகமொன்று
இமையாக வருமா

எனும் வரிகள் வெளிப்படுத்தும் தாங்கவொண்ணா துயரம் இரசிகர்களைக் கட்டிப்போட்டிருக்கிறது.குறிப்பாக இளம்பெண்கள் அப்பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்பதாகச் சொல்கிறார்கள்.

பாடல் பார்க்க….

Related Posts