சினிமா செய்திகள்

இயக்குநருடன் கருத்து வேறுபாடு அஜீத் அப்செட்

விஸ்வாசம் படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படம் நேர்கொண்டபார்வை. இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தைத்தான் எடுக்கிறார்கள்.

இந்தப் படத்தை சதுரங்க வேட்டை புகழ் வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இப்படத்தில் அஜித்துடன் வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

அஜித் வழக்குரைஙராக வருகிறார். 3 பெண்கள் ஒரு பிரச்சினையில் சிக்குகின்றனர். அவர்களுக்காக வழக்குத் தொடர்ந்து வாதாடுகிறார் அஜித். இதனால் அந்தப் பெண்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. பாலியல் தொல்லைகளும் நடக்கின்றன.

அவற்றில் இருந்து காப்பாற்றி நீதிமன்றம் மூலம் அந்தப் பெண்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கச் செய்கிறார் என்பது கதை.

இந்தப் படத்தில் தாடி மீசையுடன் அஜித் நடித்த காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டன. பின்னர் தாடியை எடுத்து வித்யாபலனுடன் நடித்த காட்சிகளை எடுத்தார்கள்.

இதன் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் தொடங்கியது. அதன்பிறகு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். தற்போது இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக் குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர்.

இப்படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்குவார் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் அதில் மாற்றம் நேர்ந்திருக்கிறதாம்.

இப்படத்தின் படப்பிடிப்பின்போது வினோத்துக்கும் அஜீத்துக்கும் ஒத்துபோகவில்லையாம். நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டனவாம். அஜித் அப்செட் என்கிறார்கள்.

அதனால் இந்தப்படத்திலேயே அவருடன் பணியாற்ற முடியாது என்கிற நிலை ஏற்பட்டதாம். ஒருவாறு சமரசம் செய்து படத்தை முடித்துவிட்டார்கள். அதனால் நிச்சயம் அடுத்த படம் அவரோடு இருக்காது என்கிறார்கள்.

ஆனாலும், நேர்கொண்டபார்வை வெற்றி என்றால் எல்லாம் மாறும்.

Related Posts