ஸ்ரீதிவ்யாவின் திமிர்ப்பேச்சு – படக்குழு அதிர்ச்சி
சந்தானம் நடிப்பில் கார்த்திக்யோகி இயக்கத்தில் வெளியான படம் டிக்கிலோனா. இப்படம் 2021 செப்டம்பர் 10 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியானது. இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனால், மீண்டும் இயக்குநர் கார்த்திக்யோகி நடிகர் சந்தானம் ஆகியோர் இணைந்து ஒரு படம் செய்யத் தயாராகியிருக்கிறார்கள்.
திரைக்கதை அமைக்கும் வேலைகள் எல்லாம் நிறைவடைந்து படப்பிடிப்புக்குப் போகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம்.
இந்நிலையில், இப்படத்தில் நாயகியாக நடிக்கக் கேட்டு ஸ்ரீதிவ்யாவை அணுகியிருக்கிறார்கள்.
அவரோ, கதை என்ன? அதில் தன் கதாபாத்திரம் என்ன? என்பதையெல்லாம் கேட்காமல் கதாநாயகன் யார்? என்று கேட்டாராம்.
சந்தானம்தான் கதாநாயகன் என்றதுமே, வீட்டில் சும்மா இருந்தாலும் இருப்பேன், சந்தானம் கூடவெல்லாம் ஜோடியாக நடிக்கமாட்டேன் என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டாராம்.
இதனால் படக்குழு அதிர்ச்சியுடன் திரும்பியிருக்கிறார்கள்
தமிழில் சில ஆண்டுகளாகவே அவருக்குப் படம் இல்லை. ஒப்பந்தமான ஓரிரு படங்களும் நடக்கவில்லை. அப்படியிருக்கும்போது ஏன் இவ்வளவு திமிராகப் பேசுகிறார் என்பது புரியாமல் குழம்பியிருக்கிறார்கள்.











