June 24, 2026
  • About
  • Write for Us
  • Advertise
  • Contact
logo
image
Menu
  • Home
  • செய்திகள்
          • சினிமா
          • நடிகர்
          சினிமா செய்திகள்

          விக்ரம் வழியில் விஜய்ஆண்டனி – புதியபடம் தொடக்கம்

          சினிமா செய்திகள்

          ஷங்கர் மகனை வாழ்த்திய விஜய் மகன் – புதியபடவிழா சிறப்பு

          சினிமா செய்திகள்

          அங்கீகாரம் படத்தின் வியாபாரம் – ஆச்சர்ய செய்தி

          சினிமா செய்திகள் நடிகர்

          விஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்

          சினிமா செய்திகள் நடிகர்

          அஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்

          சினிமா செய்திகள் நடிகர்

          சிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி

  • புகைப்படங்கள்
          • திரைப்படம்
          • நடிகைகள்
          திரைப்படம் விமர்சனம்

          செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் – விமர்சனம்

          திரைப்படம் புகைப்படங்கள்

          சக்ரா புகைப்படங்கள்

          திரைப்படம் புகைப்படங்கள்

          கடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்

          நடிகைகள் புகைப்படங்கள்

          Bigboss Raiza New Stills

          திரைப்படம் நடிகைகள் புகைப்படங்கள்

          பூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்

          நடிகைகள் புகைப்படங்கள்

          அதுல்யா ரவி – புகைப்படங்கள்

  • கட்டுரைகள்
  • விமர்சனம்
  • காணொளி
          • காணொளி
          • டிரைலர்
          • டீசர்
          காணொளி வீடியோ

          அழகே என் பாப்பாத்தி – கபிலன் வரிகளில் பொம்மைநாயகி பாடல் காட்சி

          காணொளி டிரைலர்

          விஜயானந்த் படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர்

          காணொளி வீடியோ

          காதலி கைப்பேசி காதலனின் கையில் – அறிவுமதியின் காதல் பாடல் காணொலி

          காணொளி டிரைலர்

          விஜயானந்த் படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர்

          காணொளி டிரைலர்

          பொன்னியின் செல்வன் – முன்னோட்டம்

          காணொளி டிரைலர்

          சிபிராஜின் வட்டம் திரைப்பட முன்னோட்டம்

          காணொளி டீசர்

          விஷாலின் லத்தி பட குறுமுன்னோட்டம்

          காணொளி டீசர்

          சிம்பு பிறந்தநாள் சிறப்பு – பத்துதல படக்காட்சிகள்

          காணொளி டீசர்

          திருடங்க இல்லாத ஜாதி இருக்கா? – தெறிக்கவிடும் ஜெய்பீம் டீசர்

×

தற்போது

இஸ்லாமியர் பற்றிய பார்வையை மாற்றிய படம் – இயக்குநர் மகிழ்ச்சி

என் கதாபாத்திரம் எனக்குப் பிடிக்க இதுதான் காரணம் -அர்ஜுன்தாஸ் வெளிப்படை

விக்ரம் வழியில் விஜய்ஆண்டனி – புதியபடம் தொடக்கம்

கான்சிட்டி பாருங்கள் மகிழ்ச்சி நிச்சயம் – அர்ஜுன்தாஸ் உறுதி

எங்கள் தங்கம் – திரைப்பட விமர்சனம்

பாலன் தி பாய் – திரைப்பட விமர்சனம்

Home செய்திக் குறிப்புகள்
செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகுக்குப் புதுவரவு சசிகலா புரொடக்சன்ஸ் – விவரங்கள்

August 17, 2022
sasikala production

தமிழ்த் திரையுலகில் புதிய உதயமாக தொடங்கப்பட்டிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம்.ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து நிலைகளையும் ஒருங்கே சொந்தமாகக் கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஏவிஎம் அரங்கினுள் தற்போது செயல்பட்டு வருகிறது. 

இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா  நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள லாகின் ஆகிய படங்கள் வரவிருக்கின்றன.இப்படங்களின் வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இப்படைப்புகளின் முன்னோட்ட வெளியீட்டு விழாவும், இந்நிறுவனத்தின் துவக்கவிழாவும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் நடைபெற்றது. 

இவ்விழாவினில் சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் சலீம் பேசியதாவது…

இங்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்நிறுவனத்தை புதிய நல்ல படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தில் உருவாக்கியுள்ளோம். படைப்புகளைப் பற்றிக் குழுவினர் கூறுவார்கள். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி என்றார்.  

“கா”  பட இயக்குநர் நாஞ்சில் பேசியதாவது…

நான் கா படத்தின் இயக்குநர். இந்தப்படம் ஒரு ஹைபர்லிங் கதை. ஒரு காட்டில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் படம். இந்தப்படத்திற்கு நடிகர் சலீம் கௌஷல் மிகப்பெரும் உதவியாக இருந்தார். அவர் இப்போது இல்லாதது பெரிய வருத்தம். எனக்கு வாய்ப்பளித்த ஜான் மேக்ஸ் அவர்களுக்கும், படத்தை வெளியிடும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கும் நன்றி என்றார். 

“கா” பட இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு பேசியதாவது…

ரொம்பவும் சென்ஸிடிவான ஒரு கதை. இதில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை தான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்றார்கள். நான் சில காலமாக இசையமைக்கவில்லை. லாக்டவுன் வந்ததால் இதில் நிறைய உழைக்க முடிந்தது. மொத்த படத்தில் 3 பக்கம் தான் வசனம். கமல் சாரின் பேசும் படத்திற்கு பிறகு நிறைய மௌனம் இருக்கும் படம். என் முழு உழைப்பைத் தந்துள்ளேன். ஜான் மேக்ஸ் இதனை முழு அர்ப்பணிப்புடன் எடுத்தார். அவரின் எண்ணத்திற்கு பலனாக ஆண்டனி தாஸ் வந்துள்ளார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நன்றி என்றார். 

தயாரிப்பாளர் அம்மா டி.சிவா  பேசியதாவது…

திடீரென என்னை இந்த விழாவிற்கு அழைத்தார்கள் மூன்று சின்னப்படங்களை ஒருத்தர் வாங்குகிறார் என்றார்கள் கண்டிப்பாக வருகிறேன் என்றேன். இப்போது தான் சின்னப்படங்கள் என்று ஒதுக்குகிறார்கள். பெரிய படங்கள் இந்த காலத்தில் பிரேக் ஈவன் என்று தான் போய்க்கொண்டுள்ளது. திட்டமிட்டு செய்தால் சின்னப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறும். ஜான் மேக்ஸ் எடுத்த முதல் படம் மிகப்பெரும் வெற்றி ஆனால் அவர் ஏன் ஜெயிக்கவில்லை. அவர் இடையில் நிறைய சின்னப்படங்கள் செய்தார். அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். சின்னப்படங்களுக்கு ஆதரவு தரும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தப்படங்கள் உங்களுக்கு பெரிய வெற்றியைத் தருமென வாழ்த்துகிறேன். தேர்தலில் ஜெயித்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை தான் இருக்கிறது. இது மாற வேண்டும். சின்னப் படங்கள் ஜெயிக்க வேண்டும். இந்தப்படங்கள் அனைத்தும் ஜெயிக்க வாழ்த்துகிறேன் நன்றி என்றார்.  

ட்ராமா இயக்குநர் அர்ஜூன் திருமலா பேசியது… 

தமிழில் இது எனது முதல் படம். இது சிங்கிள் ஷாட் படம். எல்லாப்படமும் எடுப்பது மிகவும் கஷ்டம் தான் ஆனால் இது சிங்கிள் ஷாட் என்பதால் இன்னும் கொஞ்சம் கஷ்டம் அதிகமாக இருந்தது. இது ஒரு கமர்ஷியல் படம். சிங்கிள் ஷாட்டில் மூன்று பாடல்கள், ஃபிளாஷ்பேக், என அனைத்து கமர்சியல் அம்சங்களும் உள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்  

ட்ராமா  பட நடிகை காவ்யா வெல்லு பேசியதாவது….
 
இது எனது முதல் படம் இந்தப்படத்தின் மூலம் தமிழ் கற்றுக்கொண்டேன். இது ஒரு சிங்கிள் ஷாட் மூவி என்பதால் பிராம்ப்டிங் அஸிஸ்டெண்ட்  இருக்க மாட்டார்கள், ரீடேக் போக முடியாது. ஆனால் நிறைய கற்றுக்கொண்டேன்.படத்தில் நான் மதுரைப் பெண்ணாக நடித்திருக்கிறேன். உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.  படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.
 
தயாரிப்பாளர் ஆண்டனி ராஜ் பேசியதாவது…. 

சசிகலா புரடக்சன்ஸ் ஆண்டனி தாஸ் மற்றும் சலீம் அவர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும். உண்மையில் படம் ஆரம்பித்து 3 வருடங்களாக அநாதையாக இருந்தோம். எங்கள் படத்திற்கு உயிர் கொடுத்தார்கள் அவர்களுக்கு நன்றி என்றார். 

லாகின் திரைப்பட இயக்குநர் ராஜேஷ் வீரமணி பேசியதாவது…

எங்கள் தயாரிப்பாளர் ஜேகே மற்றும் சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. 2 மணி நேரம் உங்களை சுவாரஸ்யப்படுத்தும் ஒரு கதையை உண்மையாக அர்ப்பணிப்புடன் சொல்லியுள்ளோம் என்றார்.

நடிகர் வினோத் கிஷன் பேசியதாவது…

லாகின் லாக்டவுன் முடிந்து ஷூட் போன படம், நாம் தெரியாமல் செய்யும் சின்ன தப்பு எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்குவது தான் இந்தப்படம் மிக சுவாரஸ்யமாக இருக்கும். இப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் ஜேகே மற்றும் வெளியிடும் சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கும். பெரிய  நன்றிகள்.
என்றார்.

இயக்குநர் தயாரிப்பாளர் திருமலை பேசியதாவது…

சசிகலா புரடக்சன்ஸ் யார் என்பது தான் தமிழ் சினிமாவின் பரபரப்பு கேள்வியாக இருந்து கொண்டிருந்தது. வெளியாகுமா என்ற நிலையில் மூன்று சின்னப் படங்களை வாங்கி அதன் வெளியீட்டை உறுதி செய்து வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ். மூன்று படைப்புகளையும் தரமான படைப்புகளாகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். நல்ல படைப்பாளிகள் இதன் மூலம் வெளிவருவார்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றார்.
 
தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசியதாவது…

சினிமாவில் சின்னப்படம் பெரிய படம் எனப் பிரிக்கத் தேவையில்லை. ரிலீஸுக்கு பின் தான் ஒரு படம் சின்னப்படமா பெரிய படமா என தெரியும். மைனா ரிலீஸான பிறகு தான் பெரிய படமாக மாறியது. எப்போதும் வெற்றிக்குப் பிறகு தான் அதை முடிவு செய்ய வேண்டும். கா படம் மிக நன்றாக இருக்கிறது. ஆண்டனி தாஸ் இந்தப்படங்களை பார்த்து வாங்கியிருக்கிறார் அவருக்கு இந்தப்படங்கள் பெரிய இலாபத்தைத் தரும் நன்றி என்றார்.  

சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் ஆண்டனி தாஸ் பேசியதாவது…

சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் பல தமிழ்ப்படங்களுக்கு நாங்கள் போஸ்ட் புரடக்சன்ஸ் செய்து வருகிறோம். நான் பல படங்களைப் பார்த்து வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் பலர், நம் படத்தை வாங்குவார்களா?  நாம் ஜெயிப்போமா ?  என கனவுகளோடு இருக்கிறார்கள். சசிகலா புரடக்சன்ஸ்  அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். 2 மணி நேரம் இரசிகனை மகிழ்விக்கும் அனைத்துப் படமும் பெரிய படம் தான். எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளைத் தேர்ந்தெடுத்து இரசிகர்களுக்கு அளிப்போம். இந்த மூன்று படங்களை எப்படி வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என்ற இரகசியம் தெரியும். இந்தப்படங்கள் கண்டிப்பாக வெற்றியைப் பெறும். இப்படங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags: Antony dass Drama johnmax Kaa Login Sasikala Productions

Post navigation

Previous Previous post:

கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் படத்தின் பெயர்

Next Next post:

சிம்பு கேட்கும் சம்பளம் – அதிரும் தயாரிப்பாளர்கள்

Related Posts

Babli Bouncer

இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி – தமன்னா உற்சாகம்

By cadmin February 18, 2022
Garudan Thanks Meet

திரையரங்க வசூலில் வெற்றி பெற்று சாதனை – கருடன் படக்குழு பெருமை

By cadmin June 15, 2024

அருள்நிதி தயாரிப்பாளர்களின் சொத்து – ஃபைவ் ஸ்டார் கதிரேசன் புகழாரம்

By cadmin July 21, 2020

Join Us

  • RSS Subscribe us on News
  • Facebook Like us on Facebook
  • Twitter Follow us on Twitter

பிரபலமானவை

  • செய்திக் குறிப்புகள்

    இஸ்லாமியர் பற்றிய பார்வையை மாற்றிய படம் – இயக்குநர் மகிழ்ச்சி

    June 23, 2026

  • Arjundas செய்திக் குறிப்புகள்

    என் கதாபாத்திரம் எனக்குப் பிடிக்க இதுதான் காரணம் -அர்ஜுன்தாஸ் வெளிப்படை

    June 23, 2026

  • VijayAntony சினிமா செய்திகள்

    விக்ரம் வழியில் விஜய்ஆண்டனி – புதியபடம் தொடக்கம்

    June 22, 2026

  • செய்திக் குறிப்புகள்

    கான்சிட்டி பாருங்கள் மகிழ்ச்சி நிச்சயம் – அர்ஜுன்தாஸ் உறுதி

    June 21, 2026

Tags

2D Entertainment A.R.murugadoss A.R.Rahman Ajith Anirudh arya Atlee bharathiraja dhanush Film Review G.V.Prakash H.Vinoth indian 2 Kamal kamalhaasan Karthi Kavin Lokesh Kanagaraj lyca Lyca Productions Manirathnam Master Nayanthara new Film pa ranjith Ponniyin Selvan Rajini rajinikanth samuthirakani sasikumar Sathyaraj shankar Silambarasan TR Simbu Sivakarthikeyan sundar c Sun Pictures suriya trisha Vijay Vijaysethupathi Vikram Vishal Yogi Babu Yuvan Shankar Raja

Recent Posts

  • இஸ்லாமியர் பற்றிய பார்வையை மாற்றிய படம் – இயக்குநர் மகிழ்ச்சி

    June 23, 2026

  • Arjundas

    என் கதாபாத்திரம் எனக்குப் பிடிக்க இதுதான் காரணம் -அர்ஜுன்தாஸ் வெளிப்படை

    June 23, 2026

  • VijayAntony

    விக்ரம் வழியில் விஜய்ஆண்டனி – புதியபடம் தொடக்கம்

    June 22, 2026

Trending Now

  • VijayAntony

    விக்ரம் வழியில் விஜய்ஆண்டனி – புதியபடம் தொடக்கம்

    June 22, 2026

  • jason sanjay 1

    ஷங்கர் மகனை வாழ்த்திய விஜய் மகன் – புதியபடவிழா சிறப்பு

    June 18, 2026

  • angikaaram

    அங்கீகாரம் படத்தின் வியாபாரம் – ஆச்சர்ய செய்தி

    June 16, 2026

Categories

  • Uncategorized (261)
  • கட்டுரைகள் (32)
  • காணொளி (139)
  • செய்திகள் (3,375)
  • செய்திக் குறிப்புகள் (1,420)
  • புகைப்படங்கள் (26)
  • விமர்சனம் (899)

Post Gallery

  • Arjundas
  • VijayAntony
  • Samantha - engal thangam
  • Balan the boy
  • noorusami
  • Attacker pooja
  • om - pm

சினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…

Cienamavalai
  • Site Terms
  • Privacy
  • Cookies Policy
  • Contact Us