கருத்து சொல்ல வரும் ‘கருத்துக்களைப் பதிவு செய்’
திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் ஆர்பிஎம் சினிமாஸ்.
‘ஜித்தன் 2 , 1 AM’ படங்களைத் தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் ‘களத்தூர் கிராமம், 143’ ஆகிய மற்ற நிறுவனத் தயாரிப்பு படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டுள்ளது.
அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக ‘கருத்துக்களைப் பதிவு செய்’ என்ற படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தை ராகுல் தயாரித்து இயக்குகிறார்.
இந்தப் படத்தில் பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர். ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
மிர்ச்சி சிவா நடித்து வெளியான ‘யா யா’ படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளி வர உள்ள ‘பாடம்’ என்ற படத்தை இயக்கி உள்ள ராஜசேகர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதுகிறார்.
படம் பற்றி இயக்குனர் ராகுலிடம் கேட்ட போது,
“இது இன்று நடந்து கொண்டிருக்கும் உண்மை கதை. சோஷியல் மீடியா என்றழைக்கப்படும் சமூக வலைதளங்களினால் தவறான பாதைக்குள் போகும் இன்றைய இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஆபத்துக்களை விவரிக்கும் படம் தான் ‘கருத்துக்களை பதிவு செய்’. இன்றைய கால கட்டத்திற்கு அவசியமான படமாக இது இருக்கும்,” என்கிறார் இயக்குனர் ராகுல்.
படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஒரே கட்டத்தில் நடை பெற்று, ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.
ஒளிப்பதிவு – மனோகர்
இசை – கணேஷ் ராகவேந்திரா
பாடல்கள் – சொற்கோ
கலை – மனோ
நடனம் – எஸ்.எல்.பாலாஜி
ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ்
தயாரிப்பு மேற்பார்வை – D.B.வெங்கடேசன்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
இணை தயாரிப்பு – JSK கோபி
கதை திரைக்கதை வசனம் – ராஜசேகர்
தயாரிப்பு, இயக்கம் – ராகுல்











