Uncategorized சினிமா செய்திகள்

தலைவி படம் வெளியாவதில் சிக்கல் – இன்று பேச்சுவார்த்தை

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு திரைப்படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், செயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கலைஞர் வேடத்தில் நாசரும் ஆர்.எம்.வீரப்பன் வேடத்தில் சமுத்திரகனியும் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு திரையரங்குகளில் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து இணையத்தில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருந்ததாம்.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியாகும் படங்களை நூறுநாட்கள் கழித்துத்தான் இணையத்தில் வெளியிடவேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை.அதன்பின், குறைந்தது ஐம்பது நாட்கள் இடைவெளியாவது வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.

இப்போது இந்தப்படத்துக்காக மேலும் இறங்கிவந்து நான்கு வாரங்கள் கழித்து இணையத்தில் வெளியிடுங்கள் என்று கேட்கிறார்களாம்.ஆனால் இரண்டு வாரங்களில் வெளியிடும் முடிவில் படக்குழு உறுதியாக இருந்ததாம். அப்படியானால் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சொல்லிவிட்டனர்.

இதனால் படக்குழு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறதாம். அதன்படி இன்று தலைவி படக்குழு மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது.

இதில் சுமுக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே தலைவி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts