ஒரு மலையாள உதவி இயக்குநர் ஒரு திரைப்படத்துக்கான கதையை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்கிறார்.அந்தக் கதை அந்தத் தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.அதனால்,ஏற்கெனவே தனு வெட்ஸ் மனு படத்தில் இணைந்து நடித்திருந்த மாதவன் கங்கனா ரனாவத் ஆகியோரை நடிக்க வைத்து அந்தப் படத்தை எடுக்க தயாரிப்பாளர்
சில புகழ்பெற்ற படங்களின் இரண்டாம்பாகப் படங்கள், முதல்பாகத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.ஆனால் சந்திரமுகி 2 படம் பார்ப்போர் யாரும் அப்படிச் சொல்லிவிடமுடியாது. இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கும் நாயகன் ராகவா லாரன்ஸ் இரசித்து நடித்திருக்கிறார்.இரண்டு தோற்றங்களுக்கும் வேறுபாடுகள் காட்டியிருக்கிறார். பல இடங்களில் ரஜினியை நினைவுபடுத்துகிறார்.சாதாரண நாயகர்கள் போல்
ராகவா லாரன்ஸ், இந்தி நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், இலட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் சந்திரமுகி 2. பி.வாசு இயக்கியிருக்கும் இந்தப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர்
இயக்குநர் பி. வாசுவின் 65 ஆவது படமாகத் தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், இலட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கார்
ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று அந்தப்படம் வெளியானது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத் தற்போது தயாராகியிருக்கும் படம் ‘சந்திரமுகி 2’. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாகத் தயாராகி இருக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.இவருடன்,
முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படம் என்று எல்லோரும் எதிர்பார்க்க, இப்படத்தில் இடம்பெறும் அனைத்தும் கற்பனையே என்று சொல்லிவிட்டுப் படத்தைத் தொடங்குகிறார்கள். அதற்கேற்ப திமுகவை தமிழக மக்கள் கழகம் என்றும் செயலலிதாவை செயா என்றும் கலைஞரை கருணா என்றும் எம்.ஜி.ஆரை எம்.ஜெ.ஆர் என்றும் ஆர்.எம்.வீரப்பனை ஆர்.என்.வீ என்றும்
முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் “தலைவி” திரைப்படம் 2021 செப்டம்பர் 10 முதல், தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார். விபிரி மோஷன் பிக்சர்ஸ், சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி
கங்கணாரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படம் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு திரையரங்குகளில் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து இணையத்தில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருந்ததாம். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு திரைப்படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், செயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தில் கலைஞர் வேடத்தில் நாசரும் ஆர்.எம்.வீரப்பன் வேடத்தில் சமுத்திரகனியும் நடித்திருக்கிறார்கள்.
மறைந்த முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்து வருகிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், செயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ‘தலைவி’ திரைப்படம் ஏப்ரல்



















