பொன்ராம் இயக்கத்தில் அதர்வா – இயக்குநர் பாலா தயாரிக்கிறார்
இயக்குநர் பாலா தற்போது நடிகர் சூர்யா தயாரிப்பில் ஒரு படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.அவர் படம் இயக்குவதோடு நில்லாமல் குறிப்பிடத்தக்க வகையிலான படங்களைத் தயாரித்தும் வருகிறார்.
பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் விசித்திரன். 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜோசப்’.மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம்தான் தமிழில் விசித்திரன் என்கிற பெயரில் உருவாகியிருக்கிறது.இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் இயக்கியுள்ளார்.
இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. விரைவில் வெளீயீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்கிறார்கள்.
இந்நிலையில், இயக்குநர் பாலா தயாரிப்பில் ஒரு புதியபடம் உருவாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அப்படத்தை பொன்ராம் இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
பொன்ராம் இப்போது விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அப்படத்தை முடித்துவிட்டு இந்தப்படத்தைத் தொடங்குவாராம்.











