சிம்பு படம் பற்றி வரும் செய்திகள் உண்மையா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாகச் சொல்லப்பட்ட மாநாடு படத்தைக் கைவிடுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது.தற்போது, மாநாடு பட பிரச்சினை குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் சத்யஜோதி தியாகராஜன், கே.ராஜன், சிவசக்தி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சிம்பு தரப்பில் அவரது தாயார் உஷா ராஜேந்தர் கலந்து கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் சிம்பு மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொடுப்பார் என்று கூறியதாகவும் செய்திகள் வருகின்றன.
ஆனால் உண்மையில் இதுகுறித்து எந்தப் பேச்சும் நடக்கவில்லை என்கிறார்கள் விசயமறிந்தவர்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்தில், ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் குறித்த பேச்சு நடப்பதாகவும் அதில் சமரசம் ஏற்பட்டு விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
மாநாடு படம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்கிறார்கள்.











