ஏ.ஆர்.முருகதாசைப் புகழ்ந்த கலாநிதிமாறன் – விஜய் 65 பட நிகழ்வு
விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் உறுதியானது.
அப்படம் துப்பாக்கி 2 ஆக இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதை உறுதி செய்யும் வண்ணம் அப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதோடு படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான ஒப்பந்தங்கள் மார்ச் 21 ஆம் தேதியன்று போடப்பட்டன என்கிறார்கள்.
அன்று இதற்காக நடந்த சந்திப்பில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் கலாநிதிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்களாம்.
அப்போது முருகதாஸைப் பார்த்த கலாநிதிமாறன், தர்பார் நல்லாதான் இருந்தது அப்புறம் ஏன் அதற்கு அவ்வளவு எதிர்மறையான விசயங்கள் நடந்தன? என்று கேட்டாராம்.
தர்பார் நன்றாக இருந்தது என்கிற சொல்லை கலாநிதிமாறனிடம் இருந்து கேட்டதில் மிகவும் மகிழ்ந்திருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். தன் நட்புவட்டம் முழுவதிலும் இதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.
தர்பார் படத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறம் எதுவும் செய்ய முடியாமல் குமுறிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு தகவல் திரையுலகில் பரவுவதால் சம்பந்தப்பட்டவர்கள் கொதிப்படைந்திருக்கிறார்கள்.











