சினிமா செய்திகள்

மாஸ்டர் ஈஸ்வரன் ரிலீஸுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – நல்ல தீர்வு சொல்லும் முன்னோடிகள்

பொங்கல் நாளையொட்டி மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் வேகமாக நடந்துவந்தன.

இந்தப்படக்குழுவினர்களின் கோரிக்கை மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல சங்கங்களின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகள் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதனால் இரண்டு படங்களும் வெளியாவதற்கான வேலைகள் வேகம் பிடித்தன.

இந்நிலையில், திடீரென நூறு விழுக்காடு இருக்கைகள் நிரப்ப மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இதுதொடர்பாக பொதுநல வழக்கும் போடப்பட்டுள்ளது.

இதனால் மாஸ்டர் ஈஸ்வரன் ஆகிய இரண்டு பட நிறுவனங்களும் திகைத்துப் போயிருக்கின்றன.ஐம்பது விழுக்காடு கூட்டத்தை வைத்து இரு படங்கள் வெளியிட இயலாது என்பதுதான் எதார்த்தம்.

இந்தநிலையில் இத்திடீர்ச் சிக்கலுக்கான தீர்வாக திரையுலக அனுபவஸ்தர்கள் கூறுவதாவது…..

நூறு விழுக்காடு இருக்கைகள் என்பதால் இரண்டு படங்கள் வெளியிட வாய்ப்பு இருந்தது.

அது அப்படியே தொடர்ந்தால் இரண்டு படங்களும் திட்டமிட்டபடி வரலாம்.

அப்படி இல்லாமல் ஐம்பது விழுக்காடுதான் என்று முடிவானால், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முதலில் அறிவித்த படம் என்கிற அடிப்படையில் எல்லாத் திரையரங்குகளையும் மாஸ்டர் படத்துக்கே ஒதுக்கலாம்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இதேபோல் ஈஸ்வரன் படத்துக்கு இப்போது ஒப்பந்தமான அளவில் இரண்டு மடங்கு திரையரங்குகள் ஒதுக்குவது என்று முடிவெடுத்தால் நல்லது.

திரையரங்கு உரிமையாளர்கள் ஒற்றுமையாக இப்படி ஒரு முடிவெடுத்து அதனை அனைவரும் ஒப்புக்கொண்டால் எல்லாத் தடைகளையும் மீறி திரையுலகைப் புத்துணர்ச்சி அடையச் செய்யலாம் என்பது அனுபவஸ்தர்களின் கருத்து.

அதன்படி சனவரி 13 முதல் 27 வரை மாஸ்டர் படத்துக்கு எல்லாத் திரையரங்குகளையும் ஒதுக்குவது சனவரி 28 முதல் பிப்ரவரி 11 வரை ஈஸ்வரன் படத்துக்கு 800 முதல் 900 திரையரங்குகள் வரை ஒதுக்கலாம் என்று சொல்கிறார்கள்.

வெளியிலிருந்து வரும் இடர்களை மீறி திரையுலகம் செழிக்க இது நல்ல வழியாகத் தெரிகிறது.

எல்லோரும் ஒருங்கிணைந்து இதை செயல்படுத்துவது நல்லது.

Related Posts