ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் இதுதான்
ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தின். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் தற்போது நடந்துவருகின்றன.
2020 பொங்கல் நாளில் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் குறித்த செய்திகள் கசிகின்றன.
கத்தி, துப்பாக்கி,சர்கார் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி அமையவிருக்கிறதாம்.
இப்படத்தை ஐங்கரன் நிறுவனத்தின் சார்பில் கருணாமூர்த்தி தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு 2020 சனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல்வாரத்தில் தொடங்கும்
என்று சொல்லப்படுகிறது.
அதற்குள் விஜய் 64 படத்தின் வேலைகளை விஜய் முடித்துக் கொடுத்துவிடுவார் என்று சொல்கிறார்கள்.










