சூர்யா குடும்பம் ஜெயம்ரவி ஆகியோருக்குத் தகுந்த பாடம் கற்பிக்கப்படும் – ரோகிணி பன்னீர்செல்வம் ஆவேசம்
நேற்று (டிசம்பர் 28,2020) தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், படூர் ரமேஷ் வள்ளியப்பன் உள்ளிட்டோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
திரையரங்குகளுக்குள் இப்போது 50 சதவீத மக்களை அனுமதிக்கலாம் என்ற அரசு உத்தரவை மாற்றி 100 சதவீத மக்களை அனுமதிக்க வேண்டும்.
திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் குறைந்து வருவதால், அங்கு வேறு நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்க வேண்டும்.
ஆந்திரா, தெலுங்கானா அரசுகளைப் போல திரையரங்குகளுக்கு வட்டியில்லாக் கடன் உள்ளிட்ட சில சலுகைகளை வழங்கவேண்டும்.
ரூ.10 கோடிக்குள் தயாரிக்கப்படும் படங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியின் மாநிலப் பங்கை விட்டுக்கொடுக்கவேண்டும்
உள்ளூராட்சி வரியை இரத்து செய்யவேண்டும்
என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை தமிழக அஎஅசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரினர்.
அதன்பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போது,
திரையரங்குகளைத் தவிக்க விட்டு நேரடியாக இணையதளங்களில் படத்தை வெளியிட்ட சூர்யா குடும்பம் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் படங்களை திரையரங்குகளில் திரையிடமாட்டோம். திரையரங்குகள் இருப்பதால்தான் ஓடிடி நிறுவனங்கள் அவர்கள் படங்களைப் பல கோடி கொடுத்து வாங்குகின்றன. நாங்கள் இல்லையென்றால் அங்கு அவர்களுக்கு மதிப்பு இல்லை. இது புரியாமல் திரையரங்குகளை அழிக்கும் நோக்கத்தோடு நடந்து கொள்ளும் சூர்யா குடும்பத்துக்குத் தகுந்த பாடம் கற்பிப்போம் என்கிறார் ரோகிணி பன்னீர்செல்வம்.











