சினிமா செய்திகள்

கார்த்தியும் செல்வராகவனும் பெருமைப்படும் தருணம் இது – ஏன்? எப்படி?

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன்.

2010 ஆம் ஆண்டு சனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளில் இப்படம் வெளியானது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப்படத்துக்குப் போதிய வசூல் வரவேற்பு கிடைக்கவில்லை.

அதேநேரம் விமர்சகர்களால் அப்படம் கொண்டாடப்பட்டது.

ஆழமான கருத்துருகளைக் கொண்ட இந்தப்படம் இப்போது இல்லையென்றாலும் வரும் காலங்களில் பெரிதும் பேசப்படக் கூடிய படமாக இருக்கும் என்றார்கள்.

அது இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

டிசம்பர் 31 ஆம் தேதி இந்தப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் திரையிடவிருக்கிறார்கள்.

இப்படி ஒரு எண்ணத்தை வெளியிட்டதுமே திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளனர்.

இப்போது தமிழகமெங்கும் சுமார் அறுபது திரையரங்குகளில் வெளியிடவிருப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

எல்லாத் திரையரங்குகளிலும் நேற்று முன்பதிவு தொடங்கியதாம்.

யாரும்.எதிர்பாராத வகையில் நிறைய முன்பதிவுகள் நடந்திருக்கிறதாம்.

ஐம்பது முதல் நூறு வரையிலான நுழைவுச் சீட்டுகள் முன்பதிவாகியிருக்கின்றனவாம்.

கொரோனாவுக்குப் பின் திரையரங்க நிலவரங்கனால் கலவரமடைந்திருக்கும் திரைத்துறையினருக்கு இந்த நிகழ்வு பெரும் ஆறுதலாக அமைந்திருக்கிறது என்கிறார்கள்.

ஒரு படைப்பாளியாக செல்வராகவனும் அதைத் தேர்ந்தெடுத்து நடித்த கார்த்தியும் பெருமைப்பட்டுக் கொள்ளும் தருணமாகவும் இது அமைந்திருக்கிறது.

Related Posts