சினிமா செய்திகள்

விஷாலுக்கு நெருக்கடி கொடுத்த டி.ராஜேந்தர் ?

தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவின் கூட்டமைப்பின் கூட்டம் ஜூம் செயலி வழியே செப்டெம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது.டி.ராஜேந்தர் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த செய்திக்குறிப்பை நேற்று வெளியிட்டார்கள்.

அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு தீர்மானம்…..

இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தின் விநியோக உரிமை சம்பந்தமாக விநியோகஸ்தர்களிடம் பணத்தினைப் பெற்றுக்கொண்டு, அவர் தயாரித்த அந்தப் படத்தினைத் திரையரங்குகளில் வெளியிடாமலும், விநியோகஸ்தர்கள் செலுத்திய தொகையைத் திரும்ப அளிக்காமலும், அப்படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் விதமாக அப்படத்தினை ஓடிடியில் திரையிடும் தயாரிப்பாளர்களிடமிருந்து விநியோகஸ்தர்கள் செலுத்திய பணத்தினைத் திரும்பப் பெற்றுச் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அளிப்பதற்குச் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

என்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஒரு பின்னணி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இத்தீர்மானம் நடிகர் விஷாலைக் கருத்தில் கொண்டே நிறைவேற்றப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

விஷால் தயாரித்து நடிக்கும் சக்ரா படத்துக்காக பல விநியோகஸ்தர்களிடம் பணம் பெற்றிருப்பதாகவும் அதுகுறித்துக் கவலைப்படாமல் இப்போது படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே அவர் உட்பட எதிர்காலத்தில் எவரும் இப்படிச் செய்யக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகச் சொல்கிறாரக்ள்.

Related Posts