குற்ற உணர்வில் இருக்கிறேன் – விஷால் கண்ணீர்
1980 மற்றும் 1990களில் அதிக படங்களை தயாரித்தவர் கோபால் ரெட்டி. தன் மகன் பார்கவ் பெயரில் பார்கவ் ஆர்ட்ஸ் என்று தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வரும் இவர் பாலகிருஷ்ணா, சுஹாசினி மணிரத்னம், விஜயசாந்தி ஆகியோர் நடிப்பில் பல படங்களைத் தயாரித்தவர்.
பார்கவ் நேற்று முன் தினம் நெல்லூரில் உள்ள இறால் பண்ணைக்குச் சென்றார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலையில் அவரது உடல் வகடா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. பார்கவ் மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பார்கவ் மரணம் குறித்து விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
பார்கவ், நீ உன் வாழ்வை முடித்துக்கொண்டிருக்கக் கூடாது.
என் சொந்த சகோதரனை இழந்துவிட்டேன். இந்த குற்ற உணர்வில் இருந்து என்னால் வெளிவரவே முடியாது. நான் உன்னை இழந்துவிட்டேன். நான் உன்னை மிஸ் பண்ணுகிறேன். ஏன் இப்படி? உன் பிரச்சினைகளை நான் தீர்த்து வைத்திருப்பேனே. இந்த செய்தியை டைப் செய்யும்போதே அழுகிறேன்
இவ்வாறு விஷால் ட்வீட் செய்துள்ளார்.
அவருடைய இந்த ட்வீட்டினால் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மாநிலத் திரையுலகமும் பரபரப்பாக இது பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றன.











