சினிமா செய்திகள் நடிகர்

விசுவாசம் படத்தின் கதை தேனியில் நடக்கிறதா? – ஒரு புகைப்படத்தால் பரபரப்பு

மே 7 முதல் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது.ஐதராபாத்தில் நடக்கும் அப்படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார். நீண்ட நாட்கள் கழித்து இதில் சால்ட் – அண்ட் பெப்பர் லுக் இல்லாமல் அஜித் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், படப்பிடிப்பு புகைப்படங்கள் எதுவுமே வெளியாகக்கூடாது என்று பல கெடுபிடிகள் படக்குழுவுக்கு விதிக்கப்பட்டது. ஆனால், அதைத்தாண்டி சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்புத் தளத்தில், ’TN 60 AB 2435’ என்ற புல்லட் வண்டி புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பதால், தேனியைச் சுற்றி நடக்கும் கதை என்று யூகித்திருக்கிறார்கள்.

பாடல் காட்சிகள் படப்பிடிப்பைத் தொடர்ந்து, இரண்டு சண்டைக்காட்சிகளையும் முதற்கட்ட படப்பிடிப்பில் படமாக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இதில் அஜித்துடன் நடிக்க நயன்தாரா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்க்விருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அயல்நாடுகளில் படமாக்கிய விவேகம் சரியில்லை என்றதும் வீரம் போல் உள்ளூரிலேயே கதை அமைத்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts