சினிமா செய்திகள்

விஜய் டிவி வாங்கியுள்ள 5 சிறுபடங்கள் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் மூடப்பட்டிருந்த திரையரங்குகளை இம்மாதம் பத்தாம் தேதி முதல் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திரைப்படத் துறையினருக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பு இது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியும் தன் பங்குக்கு திரைத்துறையினரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. 

சிறிய படங்களை யாரும் கண்டுகொள்வதில்லை என்கிற வருத்தத்தைப் போக்கும் வகையில் 5 சிறிய பட்ங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றுள்ளது. 

சமந்தா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான யு டர்ன், விவேக் நடிப்பில் 2019 இல் வெளியான வெள்ளைப்பூக்கள்,கிருஷ்ணா நடிப்பில் வெளியான கழுகு 2, ரிச்சர்ட் நடித்துள்ள திரெளபதி மு.இராமசாமி நடித்திருக்கும் கேடி என்கிற கறுப்புதுரை ஆகிய ஐந்து படங்களை விஜய் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாம்.

ஒவ்வொரு படமும் முப்பதிலிருந்து நாற்பது இலட்சம் என்கிற விலைக்குள் வாங்கப்பட்டிருக்கிறதாம். 
இந்தத் தகவலால் சிறுபடத் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.,    

Related Posts