சினிமா செய்திகள்

விரும்பிக் கேட்ட விஜய் விட்டுக் கொடுக்காத உதயநிதி – கோபம் யார் மீது?

விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. 

ஆனால் சம்பளச் சிக்கல் காரணமாக அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

அதன்பின் விஜய்யின் 65 ஆவது படத்தை மகிழ்திருமேனி இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

விஜய்யிடம் கதை சொன்னவர்களில் மகிழ்திருமேனியின் கதைதான் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.

அவர் முழுமையான திரைக்கதையைத் தயார் செய்து வைத்துள்ளார். எனவே அவரை வைத்துப் படமெடுப்போம் என்று விஜய் சொன்னாராம்.சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஏற்றுகொண்டதாம்.

ஆனால், மகிழ்திருமேனியோ உதயநிதி நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் போட்டிருந்திருக்கிறார். அதன்படி இன்னும் சில நாட்களில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில் விஜய்யிடமிருந்து அழைப்பு வந்ததால், இது எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு எனவே நீங்கள் ஒப்புக்கொண்டால் நான் விஜய் படத்துக்குப் போவேன் அதன்பின் உங்கள் படத்தை இயக்குகிறேன் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆனால், உதயநிதி தரப்பு அதை ஒப்புக்கொள்ளவில்லையாம்.மகிழ்திருமேனி எவ்வளவோ இறங்கிவந்து பேசியும் அவர்கள் மசியவில்லை என்று சொல்லப்படுகிறது.   

இதனால் மிகுந்த வருத்ததுடன் உதயநிதி படத்தை இயக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறாராம் மகிழ்திருமேனி.

வழக்கமாக இதுபோன்ற சூழ்நிலைகள் வரும்போது பெரிய படங்களுக்குப் போக இயக்குநர்களுக்கு வழிவிடுவார்கள். அண்மையில் சூர்யா சிறுத்தைசிவா கூட்டணியில் ஒரு படம் அறிவிக்கப்பட்ட பிறகு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு சிவாவுக்கு வந்தபோது சூர்யா விட்டுக்கொடுத்தார்.

இப்போது உதயநிதி விட்டுத்தர மறுத்திருக்கிறார். அவருக்கு விஜய் மீது கோபமா? அல்லது சன் பிக்சர்ஸ் மீது கோபமா? என்று தெரியவில்லை என்பதே பேச்சாக இருக்கிறது. 

Related Posts