முழுநீள நகைச்சுவைப் படத்தில் விஜய்
விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார்.
இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.
ஆனாலும் இப்படம் தொடர்பான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறதாம்.
இந்தப்படத்தின் திரைக்கதை வடிவம் இறுதியாகிவிட்டதென்றும் அதை விஜய் ஏற்றுக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.
யாரும் எதிர்பாராத வகையில் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகவிருக்கிறதென்றும் அதேசமயம் விஜய்யின் மாஸ் ஹீரோ என்கிற பிம்பத்துக்குப் பங்கமில்லாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2021 சனவரியில் பொங்கல் திருநாளுக்குப் பிறகு தொடங்கவிருக்கிறதாம்.
அதற்குள் நெல்சன், டாக்டர் படத்தை முழுமையாக முடித்துக கொடுத்துவிடுவாராம்.











