சினிமா செய்திகள்

நீ நிரந்தரமானவன் அழியவில்லை.. எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை… – எஸ்பிபிக்கு சேரன் இரங்கல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் 50000 பாடல்களுக்கு மேல் பாடி இசைரசிகர்களை மயங்க வைத்த எஸ்.பி.பால்சுப்பிரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு மறைந்தார்.

அவருக்கு தென்னைந்தியத் திரையுலகமே கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது.

அவர் மறைவு குறித்து இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள பதிவில், நீ வாழ்வாய் இவ்வையகம் உள்ளவரை.. உன் உடலுக்குள் இருந்த ஆன்மா இனி குரலாய் இசையாய் எங்களுக்குள் உலாவிக்கொண்டே இருக்கும்.. நீ நிரந்தரமானவன் அழியவில்லை.. எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை…

இவ்வாறு இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

Related Posts