சினிமா செய்திகள்

திரையுலகை ஆச்சரியப்படுத்தும் விஜய் 63 பட வியாபாரம்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களோடு கதிர், ஜாக்கிஷெராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை 2019 தீபாவளி நாளில் திரைக்குக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை ஸ்கிரீன்சீன் நிறுவனம் பெற்றிருக்கிறதாம்.

இதுவரை இல்லாத அளவு இப்படத்தின் உரிமை சுமார் அறுபது கோடிக்கு விற்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தத் தகவல் திரைத்துறையில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அடுத்த மாதம் படத்தின் முதல்பார்வையை வெளியிடும்போது இந்தத் தகவலும் சேர்ந்து வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts