என்,ஜி.கே வியாபாரத்தில் சுணக்கம்?
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படம் மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் சம்பந்தப்பட்ட வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கிறதாம்.
வழக்கமாக சூர்யா படங்கள் வியாபாரம் தொடங்கியவுடனே எல்லாப்பகுதிகளுக்கும் விநியோகஸ்தர்கள் வந்துவிடுவார்கள். உடனே வெற்றிகரமாக வியாபாரம் முடிந்துவிடும்.
ஆனால் இந்தப்பட வியாபாரத்தில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறதாம்.
படத்துக்கு தயாரிப்பாளர் ஒரு விலை சொல்ல அந்த அளவு விலை கொடுத்து வாங்க யாரும் முன்வராததால் சுணக்கம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் சூர்யாவின் முந்தைய படங்கள் நிறைவான வசூல் தரவில்லை என்பதால் இப்படி நடக்கிறதென்கிறார்கள்.
இன்னொரு பக்கம்,, படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, வியாபார நுணுக்கங்கள் அறிந்தவர் என்பதோடு ஒரு படத்தின் வியாபாரம் மற்றும் வசூல் நிலவரங்கள் படத்தின் நாயகனை நேரடியாகப் பாதிக்கக் கூடியது என்பதைத் தெளிவாக உணர்ந்தவர் என்பதால், இப்பட வியாபார விசயத்தில் அவசரம் காட்டாமல் மிக நிதானமாக இருக்கிறார் என்வேதான் வேகமாக வியாபாரத்தை முடிக்காமல் இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.











