சர்ச்சையில் சிக்கியது தமிழ்ப்படம் 2 – ஜூலை 12 இல் வெளியாகுமா?
கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படம் ஜூலை 13 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
விரைவில் வெகு விரைவில் என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருந்த கடைக்குட்டி சிங்கம் படம் ஜூலை 13 என்று ஜூலை 9 மதியம் அறிவித்தார்கள்.
அப்படத்தின் வெளியீட்டுத்தேதியை அறிவித்த கொஞ்ச நேரத்தில் தமிழ்ப்படம் 2 ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
இப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதி பெற்றுத்தான் படங்களின் வெளியீட்டுத்தேதியை அறிவிக்க வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது.
தமிழ்ப்படம் 2 குழுவினர் அதை மீறி வெளியீட்டுத் தேதியை அறிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.. அதனால் விதிமுறை மீறியதற்காக அவர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.இதனால் அந்தப்படம் ஜூலை 12 வெளியாவது சந்தேகம் என்று சொகிறார்கள்.
இதுகுறித்து, தமிழ்ப்படம் 2 சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதியோடுதான் படத்தை வெளியிடுகிறோம் என்று சொல்கிறார்கள். ஜூலை 12 உறுதியாகப் படம் வெளியாகும் என்கிறார்கள்.
இரண்டில் எது உண்மையான உண்மை என்பது போகப்போகத் தெரிந்துவிடும்.










