சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து 2020 பொங்கலுக்கு வெளியாகி வெற்றிபெற்ற படம் பட்டாஸ். இந்தப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்தப்படத்தை துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன்
மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அவற்றிற்கடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் நான்காவது படம் நேற்று (டிசம்பர் 14,2020) தொடங்கியிருக்கிறது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கவுள்ளார். படத்தைத் தொடங்கும்போதே பெயர்
தனுஷ் இப்போது மாரிசெல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக்நரேன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். தனுஷ் 43 என்று சொல்லப்படும் இந்தப்படம் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே அக்டோபர் மாதம் வெளியாகும் என்று
தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதீஷ்குமார் நேற்று வெளியிட்டுள்ள குரல்பதிவொன்றில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வரவிருக்கிற தேர்தலில் போட்டியிடவிருப்பதால் தற்போது வகித்துவரும் ஆலோசனைக் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதோடு ஆலோசனைக்குழு பொறுப்பிலிருந்தபோது தீர்த்து வைத்த பல சிக்கல்களைப் பட்டியலிட்டுள்ளார்.அவர் பட்டியலிட்டுள்ள 59
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியான படம் பட்டாஸ். இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார் . தனுஷின் 43 ஆவது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடனும்
மிக நீண்ட காலத்திற்குப் பின் நடிகை சினேகா தமிழ்தித்ரை உலகில் எல்லோராலும் பேசப்படும், பாராட்டப் படும் நிலைக்கு வந்து இருக்கிறார் என்றால் மிகை ஆகாது. பொங்கலுக்கு வெளியான “பட்டாஸ்” படத்தில் தனுஷ் மற்றும் சினேகாவின் நடிப்பு பெரும் பாராட்டைப்பெற்று வருகிறது. தமிழகத்தின் தொன்மைமிக்க தற்காப்புக் கலையான “அடிமுறை” கலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் “பட்டாஸ்” படத்தில் நடிகை
2020 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 16 அன்று வெளியாகவிருக்கும் படம் பட்டாஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்தப்படத்தை விளம்பரப்படுத்த தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் பட்டாஸ் படம் பற்றியும் தனிப்பட்ட முறையிலும் பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். அவற்றிலிருந்து சில…. பட்டாஸ்
கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து கொடி படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ்
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் வெப் சீரிஸ் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’.2011 ஆம் ஆண்டு இந்தத் தொடரின் முதல் பகுதி வெளியானது. கடந்த 9 ஆண்டுகளில் 8 பகுதிகளாக வெளியாகி, தன்னுடைய பயணத்தைத் தற்போது முடித்துக் கொண்டுள்ளது. தற்போது 8 ஆவது பகுதியின் முதல் பாகம், கடந்த மாதம் (ஏப்ரல்) 14 ஆம் தேதி ஒளிபரப்பானது. மொத்தம் 6 எபிஸோடுகள் கொண்ட இந்த சீஸன் மே 20 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ‘தகுதியான
கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா விரைவில் வெளியாகவிருக்கிறது. தனுஷ் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அசுரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குப் போவதற்கு முன், இன்னொரு புதிய படத்தின் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கிறாராம் தனுஷ்.






















