சினிமா செய்திகள்

தனுஷ் சொன்ன செய்தி – தனுஷ் 43 படக்குழு மன உளைச்சல்

தனுஷ் இப்போது மாரிசெல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.

இதற்கடுத்து அவர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக்நரேன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். தனுஷ் 43 என்று சொல்லப்படும் இந்தப்படம் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள்.

கொரோனாவால் எல்லாம் மாறிவிட்டது.

இப்போது அதற்கான வேலைகளைத் தொடங்கினார்களாம். இந்நேரத்தில், இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்த பின்பு எனக்குக் கொஞ்சம் இடைவெளி வேண்டும், நான் ஒரு ஆங்கிலப்படத்தில் நடிக்கவிருக்கிறேன், அதன் படப்பிடிப்புக்குப் போகவேண்டியிருக்கிறது. அது ஒரேகட்டமாக முடிவடைந்துவிடும். அதை முடித்து கார்த்திக் நரேன் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று தனுஷ் சொல்லிவிட்டாராம்.

இதனால் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் ஆகியோருக்கு ஏகப்பட்ட மன உளைச்சலாம்.
கதாநாயகனாயிற்றே? கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கவும் முடியாது அவர் விருப்பப்படி விட்டால் பெரும் நட்டத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்கிற மன உளைச்சல் தயாரிப்பு நிறுவனத்துக்கு.

இயக்குநருக்கு இரண்டாவது படமான நரகாசூரன் வரவேயில்லை அடுத்து வந்த மாஃபியா படுதோல்வி. இந்தப்படத்தை வேகமாக எடுத்து வெளியிட்டு தன் திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம். ஏற்கெனவே இந்தப்படம் தொடங்குவது தாமதம்.அதில் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டுமா? என்கிற மன உளைச்சல்.

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எல்லோரும் நிம்மதி அடைகிற மாதிரி ஒரு செய்தி வந்துவிட்டதாம்.

அது, ஆங்கிலப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த தேதி தெரியாமல் தள்ளிப்போய்விட்டது என்பதுதான்.

இதனால், எல்லோரும் நிம்மதியாகி திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்களாம்.

Related Posts