மீண்டும் விஜய் அட்லி கூட்டணி – திரையுலக ஆச்சரியம்
லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இப்படத்தில், விஜய்யுடன், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிய புதிய செய்தி ஒன்று வேகமாகப் பரவிவருகிறது.
விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர் இவர்தான் என்று இதுவரை ஆறேழு பேரைச் சொல்லிவிட்டார்கள்.
இந்நிலையில் கடந்த இருநாட்களாக விஜய்யின் அடுத்த பட இயக்குநர் அட்லி என்றொரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது. அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது .
உறுதிப்படுத்தப்படாத இந்தத் தகவல் வேகமாகப் பரவி வரும் அதேவேளையில் அடுத்த படம் இல்லை அதற்கடுத்த படத்தைத்தான் அட்லி இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இரண்டில் எது சரி? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.
அட்லியை இயக்குநராக்கினால் தயாரிப்புச் செலவு அதிகமாகும் என்று பல தயாரிப்பாளர்கள் ஒதுங்கிப் போன நேரத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறது. இப்போது அட்லி என்ன செய்வார்? என்பதை திரையுலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.











