சினிமா செய்திகள்

பொன்ராமை அடிக்கப் பாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் – எம்ஜிஆர் மகன் பரபரப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் எம்.ஜி.ஆர் மகன். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்புப் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர்.

இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர்.

2019 செப்டம்பர் 26 ஆம் தேதி இப்படத்தின் தொடக்கவிழா நடந்தது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தேனியில் துவங்கப்பட்டது. இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்து வந்தார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது என்றும் தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு ஈடுபட்டு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமியும், இசையமைப்பாளராக அந்தோணி தாசனும், விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும் மற்றும் துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர்.

படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்த பின்பும் படத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படவில்லையாம். முதல்பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரித்த இயக்குநர் பொன்ராம், தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பணம் வரவில்லை என்று சொல்லி ஊதியம் கொடுக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தாராம்.

தயாரிப்பு நிறுவனத்தில் விசாரித்தால் பேசியதைவிட சுமார் ஐம்பது இலட்சம் அதிகமாக வாங்கிவிட்டார் பொன்ராம் என்று சொல்லப்பட்டதாம்.

இதனால் வெகுண்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் பொன்ராமை அடிக்கப் பாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.இடையில் இருந்தவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்களாம்.

பொன்ராம் இப்படிச் செய்யலாமா? என்று வருத்தத்துடன் பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Related Posts