ஒரு பள்ளி ஆசிரியை, தனக்கு துப்பாக்கி வேண்டுமெனக் கேட்கிறார். காவல்துறை மறுக்கிறது.அதனால் நீதிமன்றம் செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது? அவர் ஏன் துப்பாக்கி கேட்கிறார் ஆகிய கேள்விகளுக்கான விடையாக விரிந்திருக்கும் படம் லைசென்ஸ். ஏஏஏ சின்ன மச்சான் உள்ளிட்ட பல பாடல்கள் மூலம் நம் செவிகளுக்குள் நிறைந்த
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் என்றார் திருவள்ளுவர். அதிகாரவர்க்கத்திடம் அணுகிப்போனால் ஆபத்து அதேசமயம் விலகிப் போனாலும் ஆபத்து என்ற வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்கும் விதமாக வந்திருக்கும் படம் சான்றிதழ். எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்கும் ஒரு கிராமத்துக்கு இந்திய அரசாங்கம் விருது தர முன்வருகிறது. அதை ஏற்க மறுப்பதாலேயே அந்தக்
ஒரு பழங்காலக் கோயிலுக்குள் பெரும் புதையல் இருக்கிறது. அதைக் கைப்பற்ற சர்வதேசக் கொள்ளைக்கும்பல் திட்டமிடுகிறது. அதற்காக அரசாங்கத்தின் தொல்பொருள்துறையிலிருக்கும் அதிகாரிகளையே கைக்குள் போட்டுக் கொண்டு அதைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் திட்டம் பலித்ததா? இல்லையா? என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் மாயோன். தொல்பொருள் துறையில் பணியாற்றும்
ஏழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது சொத்துகளையும் அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் என்ற பெயரில் படமாக உருவாகிறது. இதில். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். ஊமை விழிகள் உள்ளிட்ட பலவேறு வெற்றிப்படங்களை இயக்கிய ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். பாரதிராஜா,
மாபெரும் வெற்றி பெற்ற நானி என்கிற தெலுங்குப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். விரைவில் வெளிவரவுள்ள அந்தப்படத்தின் பெயர் சிவகாமி. மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்றுப் போன நிலையில் தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக திகில் கலந்து தயாராகியிருக்கிறது “சிவகாமி” திரைப்படம். இத்திரைப்படத்தை எம்.டி.சினிமாஸ்
மாலை ஆறு மணிக்கு மேல் கண் தெரியாது என்கிற மாலைக்கண் நோய் உள்ள நாயகன் அதை மறைத்து காதலிக்கிறார். கல்யாணம் வரை போகிறார். அப்போது என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். நாயகனாக நடித்திருக்கும் வைபவ், கண் தெரியாத நேரங்களில் பொருத்தமாக நடித்திருக்கிறார். கண் தெரியாத நேரத்தில் நடனம் ஆடும்போது கூட பார்வையற்றவர்களின் உடல்மொழியைக்
நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ், ஏப்ரல் 13 அன்று திடீர் மரணமடைந்தார். அவர், இலங்கையில் உள்ள கண்டியில் 1973 மார்ச் 5 ஆம் தேதி பிறந்தவர் முகவை குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ். கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்திலும் அவர் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜே.கே.ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்ற
இரவு பனிரெண்டு மணிக்கு அல்ல பகல் பனிரெண்டு மணிக்கே பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத பேரவலத்தைச் சுட்டிக்காட்டும் படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. தனியாக நடந்துசெல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் நபர்களிடமிருந்து நகை பறிக்கிறார் நாயகன் துருவா. அடடே என்று நிமிர்ந்து உட்காருவதற்குள் அந்த நகை பறிக்கும் கூட்டத்திலேயே சேர்ந்துவிடுகிறார். அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து
பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மஞ்சுநாத்.எஸ் ‘பொறுக்கிஸ்’ என்கிற படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். கே என் ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே ’அல்ல நாங்கள்’ என்ற உபதலைப்பும் இடம் பெற்றுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார்.