நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது, சந்திரமுகி 2, ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் “அதிகாரம்” ஆகிய படங்களில் நடித்துக்
ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் 2018 ஜூன் 7 ஆம் தேதி வெளியான படம் காலா. அப்படத்துக்கு அடுத்து இயக்குநர் பா.இரஞ்சித் எழுதி இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா,துஷாரா, கலையரசன்,பசுபதி, சுந்தர், ஜான் விஜய்,காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப்படம்
மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அவர் இப்போது, சிவகுமாரின் சபதம் அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் ஆதி நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்கியும் வருகிறார்.இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். மீசைய முறுக்கு படத்திற்குப் பிறகு ஆதி
உதயநிதி இப்போது மகிழ்திருமேனி இயக்கும் படம், ஆர்ட்டிகள் 15 என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்று, மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவைதவிர அதியமான் இயக்கத்தில் ஒரு படம் பாதியில் நிற்கிறது. இந்நிலையில், அவர் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார். ஆனது மட்டுமல்ல நாள்தோறும் மக்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இதனால்
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் மற்றும் அண்மையில் சன் தொலைக்காட்சியில் வெளீயான புலிக்குத்திப்பாண்டி ஆகிய ஆறு படங்களை இயக்கியிருக்கிறார் முத்தையா. இவற்றிற்கடுத்து இவர் விஷாலை வைத்து ஒரு படம், 2டி நிறுவனத்துக்காக சூர்யா அல்லது கார்த்தியை வைத்து ஒரு படம், இவை தாமதமாவதால் அவற்றிற்கு முன்பாக கெளதம்கார்த்திக் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் என்றெல்லாம்
குட்டிப்புலி, கொம்பன் உட்பட பல படங்களை இயக்கியவர் முத்தையா, விஷால் நடிப்பில் மருது படத்தை இயக்கியிருந்தார்.அவர் இயக்கிய புலிக்குத்தி பாண்டி படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது. முத்தையா இயக்கத்தில் விஷால் நடிப்பில் புதிய படமொன்று உருவாகிறது என்று சொல்லப்பட்டது.முத்தையா சொன்ன மையக்கதை விஷாலுக்குப் பிடித்திருந்தது. அதனால் அதனை முழுமையான திரைக்கதையாக எழுதுமாறு
2011 ஆம் ஆண்டு விதார்த் நடித்த முதல் இடம் எனும் திரைப்படத்தைத் தயாரித்திருந்தது. அதன்பின் 2014 இல் இதுவும் கடந்து போகும் எனும் படத்தைத் தயாரித்து நேரடியாக யூடியூபில் வெளியிட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கத் தயாரானது. ஆனால் திரைப்படம் தயாரிக்காமல் திரைப்படங்களுக்கு இணையாக ஓர் இணையதளத் தொடரரைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
தர்பார் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் சன் பிக்சர்ஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தை ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் படத்திலிருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ்
சந்தானம் இப்போது ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ்ஜெயராஜ் படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அப்படத்துக்கு சபாபதி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. திருச்சி,கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் அப்படத்தின்
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படம் அறிவிக்கப்பட்டது. ஆனால்,அது நடக்கவில்லை.அதற்குக் காரணம், அந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாது நேரடியாக இணையதளத்தில் வெளியாகவிருக்கும் படம் என்கிறார்கள். அதனால்தான் சந்தானம் நடிக்க மறுத்தார் என்று சொல்லப்படுகிறது. இப்போது சந்தானத்துக்குப் பதிலாக ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இதற்கிடையே,























