September 16, 2026
சினிமா செய்திகள் நடிகர்

தமிழில் குமரன் தெலுங்கில் கிருஷ்ணன் – புத்திசாலி சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

இந்தப்படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாளை சூர்யாவுக்குப் பிறந்த நாள். அதை முன்னிட்டு, என்ஜிகே படத்தின் இரண்டாவது பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ‘என்.ஜி.கே.’ என்றால் என்ன என்பதற்கான விளக்கமும் அதில் தரப்பட்டுள்ளது. ‘நந்த கோபாலன் குமரன்’ என்பதன் சுருக்கம் தான் என்.ஜி.கே.

‘நந்த கோபாலன் குமரன்’ என்பதற்குப் பதிலாக ‘நந்த கோபாலன் கிருஷ்ணன்’ என்று தெலுங்கில் பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தில் சூர்யாவின் பெயர் இதுவாம்.

தமிழில் முருகக் கடவுள் பெயரை வைத்திவிட்டார்கள். தெலுங்கிலும் அதையே சொன்னால் ஒட்டாது என்பார் அங்கே கிருஷ்ணன் என்று வைத்துவிட்டார்கள்.

ஆங்கிலத்தில் இரண்டு கடவுள்கள் பெயரும் கே வில் தொடங்குவதால் சிக்கல் இல்லை. சூர்யா படக்குழுவின் புத்திசாலித்தனம் இது.

Related Posts