September 14, 2026
செய்திக் குறிப்புகள்

தமிழகம், இந்தியா தாண்டி உலகெங்கும் சூர்யா பிறந்தநாள்- ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு நன்றாக அமைந்திருக்கிறது. அவர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் வெற்றி, அவர் தயாரித்த கடைக்குட்டி சிங்கம் வெற்றி ஆகியனவற்றோடு அடுத்தடுத்து நம்பிக்கையான. படங்கள்.

இந்நிலையில்,ஜூலை 23 ஆம் தேதி வருகிற நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

சூர்யாவின் ரசிகர்கள் எப்போதும் அவருடைய பிறந்தநாளை நற்பணிகள், இரத்த தானம் மற்றும் பல நல்ல விஷயங்களை செய்து விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

இந்த வருடமும் அதே போல் உலகம் முழுவதும் உள்ள சூர்யா ரசிகர்கள் மற்றும் சூர்யா நற்பணி மன்றத்தினர் தங்கள் நாயகனின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளனர்.

வட சென்னை பகுதி சூர்யா நற்பணி மன்ற நிர்வாகிகள் 10 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா , இரத்ததான முகாம், அன்னதானம் மற்றும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களை நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஜூலை 23 அன்று பிறக்கும் 10 குழந்தைகளுக்கு வட சென்னையை சேர்ந்த சூர்யா நற்பணி மன்றத்தினர் தங்க மோதிரம் வழங்க உள்ளனர்.

இது தவிர கோவை , திருச்சி, மதுரை, நெல்லை என தமிழகம் முழுவதும் உள்ள சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்றத்தினர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, விளையாட்டு போட்டி, சூர்யாவின் திரைப்படம் திரையிடல் என்று பல விஷயங்கள் நடைபெறவுள்ளது.

இதே போல் கேரளா, ஆந்திரா, தெலங்கானா , கர்நாடகா, மும்பை என இந்தியா முழுவதும் உள்ள சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவருடைய பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடவுள்ளனர்.

இது தவிர இலங்கை,சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா, இலண்டன் போன்ற வெளிநாடு வாழ் சூர்யா ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts