சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் நயன்தாரா மோதல் – ரஜினி சமரசம்

பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு, அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாராவை நாயகியாக்க ஏற்கெனவே பேசியபோது அவர் மறுத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.

அதற்குக் காரணம், 2005 ஆம் ஆண்டு சூர்யா, அசின், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான கஜினி படம் வெளியானது.

அந்தப்படத்தில் அசினுக்கு மிகுந்த நற்பெயர். நயன்தாராவின் வேடம் பெரிதாக இல்லை. அது மட்டுமின்றி சூர்யா மொட்டை போட்டுக்கொண்டு மறதி நோய் உள்ளவராக இருக்கும்போதுதான் நயன்தாரா வருவார். அந்தப் பகுதி முழுக்க மெல்லிய வெளிச்சத்தில் படமாக்கப்பட்டிருக்கும்.
அதனால் நயன்தாராவும் டல்லாக தெரிவார்.

அசினை சிறப்பாகக் காட்ட வேண்டும் என்பதற்காக என் வேடத்தைக் குறைத்ததோடு அதைப் படமாக்கிய விதமும் சரியில்லை, இதற்குக் காரணம் முருகதாஸ்தான். இனிமேல் அவர் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லியிருந்தார் நயன்தாரா.

இப்போது எப்படி ஒப்புக்கொண்டார்?

இந்தமுறை ரஜினியே நயன்தாராவிடம் பேசி,உங்களுக்கு நல்ல வேடம் நல்லா இருக்கும் நம்பி நடிங்க என்று கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

அதன் காரணமாகவே நயன்தாரா ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்கிறார்கள்.

Related Posts