இலண்டனில் சற்றுமுன் தொடங்கியது சூர்யா 37 படப்பிடிப்பு
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
இலண்டன் நேரப்படி மாலை நான்கு மணிக்கு எளிமையான முறையில் தொடக்கவிழா நடந்தது.(தமிழக நேரம் இரவு 8.30) அதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
லைகா நிறுவனர் சுபாஷ்கரன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடக்கி வைத்திருக்கிறார்.
இதில் நாயகன் சூர்யா, நாயகி சாயிஷா, மோகன்லால், பொம்மன் இரானி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அபிந்ந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநர் கிரண் கலை இயக்கம் செய்கிறார்.
தொடக்கவிழாவில் லைகா நிறுவனத்தில் பணியாற்றும் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள்.
சூர்யா சாயிஷா காதல் காட்சிகள் மற்றும் சூர்யா மோகன்லால் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளைப் படமாக்கவிருக்கிறார்களாம்.













