சினிமா செய்திகள் நடிகர்

கமல் ரஜினியை முந்தும் பவன்கல்யாண்

ஜனசேனா கட்சி தொடங்கிய தெலுங்கு நடிகர் பவண்கல்யாண் இன்று சென்னை வந்திருந்தார்.

அவருடைய கட்சி பற்றிய அறிமுகங்களுக்குப் பின் அவர் பேசியவற்றின் சாரம் மாநில் உரிமைகளைப் பற்றியதாக அமைந்திருந்தது.

கட்சி தொடங்கியதன் நோக்கமே இதுவரை மத்திய அரசின் அதிகார மையமாக விளங்குவது வட இந்தியாவாகவே இருக்கிறது. அதை மாற்றி தென்னிந்தியாவை அதிகார மையமாக மாற்றுவதற்காக என்கிறார்.

ஜல்லிக்கட்டு போல் அந்தந்த மாநிலத்துக்கான பண்பாடு கலாச்சாரங்களைப் பாதுகாக்க வேண்டும் .

மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

தமிழக இளைஞர்கள் சுயமரியாதை வேண்டும் என்கின்றனர். அதற்காகப் போராடுகின்றனர். அதை வரவேற்கிறேன் என்றார்.

கமல் மற்றும் ரஜினியைவிட இவர் பேசும் அரசியல் தெளிவாக இருக்கிறது.

இன்றைய தமிழகம் மட்டும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அவசியம் தேவையான சுயமரியாதை என்பதை வலியுறுத்திப் பேசும் பவன்கல்யாண்
சொல்கிறபடி நடந்தால் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவார் என்பது நிச்சயம்.

Related Posts