ஶ்ரீரெட்டி கொடுத்த அதிர்ச்சி – பரபரக்கும் தெலுங்கு தமிழ் திரையுலகம்

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, தெலுங்கு மற்றும் தமிழ்த் திரை உலகில் உள்ளவர்கள் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் என்று குற்றம் சுமத்தி சம்பந்தப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குநர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார். பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்தவர்களுடன் படுக்கைக்கு சென்றதாகக் கூறினார்.
இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக எடுக்க இருக்கிறார்.
தித்திர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ரவிதேவன், ரங்கீலா என்டர்பிரைசஸ் சித்திரைச் செல்வன் இருவரும் இணைந்து இந்தப்படத்தைத் தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
அலாவுதீன் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். 70 சதவிகிதம் ரகசிய கேமரா மூலம் படமாக்க இருக்கிறார்கள். ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்கள் இப்படத்தில் இடம் பெற இருப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறியிருக்கிறார்.
இந்தப்படத்தில் என்னென்ன காட்சிகள் இருக்குமோ யார் யாரையெல்லாம் காட்டிக் கொடுக்கப் போகிறாரோ என்கிற பரபரப்பு இப்போதே உருவாகிவிட்டது.