சினிமா செய்திகள்

டாக்டர் அயலான் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்

சிவகார்த்திகேயன் இப்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர், ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவு பெற்றுவிட்டன. அதற்குப் பிறகான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இவற்றில், டாக்டர் படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவிருக்கிறதென்றும் அயலான் படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவிருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.

இவற்றிற்கு அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை.

ஆனால், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறதாம்.

அட்லியிடம் பணியாற்றிய சிபிச்சக்ரவர்த்தி எனும் புதிய இயக்குநர் எழுதி இயக்கவிருக்கும் படத்தில் அடுத்து நடிக்கவிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் முதல்பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயனே தயாரித்துக் கொடுக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

படத்தில் பணியாற்ற தொழில்நுட்பக்குழுவினரை ஓப்பந்தம் செய்து வேலைகளைத் தொடங்கிவிட்டார்களாம்.

பிப்ரவரி மாதத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.

Related Posts