சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படங்கள் வரிசை – இப்போதைக்கு இவைதாம்

சிவகார்த்திகேயன் இப்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களே இருக்கிறது.அதற்காக உடல் எடையைக்
குறைத்து தயாராகியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளவுள்ளார்.

இத்தகவலை,அயலான் வெளியீட்டு நேரத்தில் அளித்த பேட்டிகளில் அவரே சொல்லியிருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படங்கள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.

அவர்கள் சொல்லவில்லையெனினும், அப்படத்துக்கு அடுத்து அவர் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றொரு உறுதிப்படுத்தப்படாத தகவல் உள்ளது.

அதோடு, தற்போது விஜய்சேதுபதி நடித்திருக்கும் மகாராஜா படத்தைத் தயாரித்துள்ள பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றும் அப்படத்தை டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இப்போது இன்னும் ஒரு புதியபடத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

அந்தப் புதிய படத்தை இயக்குவது வெங்கட்பிரபு என்றும் அப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இவ்விருவரும் இணையும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று முதலில் சொல்லப்பட்டது. அந்தநேரத்தில்தான் விஜய் பட வாய்ப்பு வந்ததும் வெங்கட்பிரபு அதை இயக்கிக் கொண்டிருக்கிறார்.அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படம் முடிந்ததும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலேயே வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணையும் படம் இருக்கும் என்று சொல்லப்பட்டது.

இப்போது திடீர் மாற்றமாக அப்படம் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்குச் சென்றிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று சொல்கிறார்கள்.

இதற்கிடையே ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியானால் அந்தப்படம் முடிந்ததும் இந்தப்படத்தில் நடிப்பார் என்றும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது.

இப்போதைக்கு இதுதான் சிவகார்த்திகேயன் படங்கள் வரிசை என்று சொல்லப்படுவதால் அடுத்தடுத்து வலிமையான கூட்டணிகளை அவர் அமைத்துவிட்டார். ஓரிரு ஆண்டுகளில் அவர் இன்னும் பல உயரங்களைத் தொடுவார் என்று அவருடைய நலம்விரும்பிகள் சொல்கிறார்கள்.

Related Posts