சினிமா செய்திகள் நடிகர்

4 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி செய்த திடீர் மாற்றம்

அரசியல் பயணத்தைத் தொடங்குவதால் த்ன்னுடைய இயல்பான நடவடிக்கைகளில் பல மாற்றங்களைச் செய்கிறார் ரஜினி. அவற்றில் முக்கியமானது ஊடகங்களுடனான தொடர்பு. கடந்த பல ஆண்டுகளாக ஊடகங்களை மதிக்கவே மதிக்காதரஜினி, இப்போது அடிக்கடி அழைத்துப் பேசுகிறார். அதேபோல சமூக ஊடகங்களிலும் கவனம் செலுத்துகிறார்.

2013ஆம் ஆண்டு ட்விட்டரில் இணைந்தார் ரஜினிகாந்த். ஆனால், 2014ஆம் ஆண்டுதான் முதல் ட்வீட்டையே பதிவிட்டார். முதல் மூன்று ட்வீட்டுகளில், ட்விட்டரில் அவரை வரவேற்ற ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ரஜினி, நான்காவது ட்வீட்டாக நரேந்திர மோடி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுவரை 116 ட்வீட்டுகளைப் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ஒரு ரீட்வீட் கூட செய்யவில்லை. 45 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை பிந்தொடர்கிறார்கள், அவரோ வெறும் 24 பேரை மட்டுமே பின்தொடர்கிறார். நரேந்திர மோடியின் இரண்டு கணக்குகள், அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், அனிருத், செளந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரைத் தவிர மற்ற எல்லாமே செய்தி நிறுவனங்களைத்தான் அவர் பின்தொடர்கிறார்.

ரஜினியின் ட்விட்டர் ஐடி, @superstarrajini என இருந்தது. தற்போது அதில் உள்ள சூப்பர் ஸ்டாரைத் தூக்கிவிட்டு ரஜினிகாந்த் என மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது, @rajinikanth என்று மாற்றியிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் இணைந்தார். அதிலும், Rajinikanth என்றே உள்ளது.

நான்காண்டுகளுக்குப் பிறகு அவர் இந்த மாற்றத்தைச் செய்துள்ளார்.அரசியலுக்கு வருகிறபடியால் சூப்பர்ஸ்டார் பட்டம் அங்கு பொருத்தமாக இருக்காது என்பதால் இப்படிச் செய்திருக்கிறார் என்கிறார்கள்.

Related Posts