சினிமா செய்திகள்

ரஜினி 168 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சிறுத்தை,வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிவா இயக்குகிறார்.

இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இது ஒரு குடும்பக்கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பெயரை இன்று மாலை ஆறு மணிக்கு அறிவித்துள்ளார்கள்.

இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168- படத்தின் தலைப்பு ”அண்ணாத்த” என வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts