ஏப்ரல் 28 இல் பொன்னியின்செல்வன் 2 – இன்று மாலை அறிவிப்பு
2022 ஆம் ஆண்டின் வெற்றிகரமான படமாகவும் வசூலில் இதுவரை இருந்த சாதனைகளை முறியடித்த படமாகவும் அமைந்தது லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின்செல்வன் படம்.
இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன். முதல்பாகம் 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது.
இரண்டாம் பாகத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
அதனால் இதுவரை இல்லாத வழக்கமாக இப்போது இறுதிசெய்யப்பட்டுள்ள இரண்டாம்பாகம் படத்தைப் பலருக்குப் போட்டுக்காட்டி கருத்து கேட்டுவருகிறாராம் மணிரத்னம்.
சனவரி 5,6 ஆகிய நாட்களில் இரண்டாம்பாகத்திற்கான படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதைத் தொடர்ந்து மேலும் சிலநாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இரண்டாம்பாகம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
அவ்வறிவிப்பில் இரண்டாம்பாகத்தின் வெளியீட்டுத்தேதி சொல்லப்படும் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
அதை நிறைவேற்றும் விதமாகவே இரண்டாம்பாகக் குறித்த அறிவிப்பு இருக்குமென்கிறார்கள்.
2023 ஏப்ரல் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொன்னியின்செல்வன் இரண்டாம்பாகம் வெளியாகவிருக்கிறது. இன்று மாலை வெளியாகும் அறிவிப்பில் இது உறுதியாகும் என்கிறார்கள்.













