சினிமா செய்திகள்

கேரள முதல்வரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் – தமிழில் வெளியிடுகிறது ரெட்ஜெயண்ட் நிறுவனம்

மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான யாத்ரா படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆந்திரமாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு அப்படம் உருவானது.

அதனைத் தொடர்ந்து தற்போதைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ஒன் என்கிற படம் எடுக்கப்பட்டது.

சந்தோஷ் விஸ்வநாத் என்பவர் இயக்கியிருக்கும் அப்படத்தில் பினராயி விஜயன் கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்திருந்தார்.அவரோடு, சீனிவாசன், ஜோஜோ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் அப்படத்தில் நடித்திருந்தனர்.

ஏப்ரல் 27 ஆம் தேதி, நெட்ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான அப்படம் கேரள இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன்பின், கேரளா முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தைத் தமிழிலும் வெளியிட படக்குழு முடிவுசெய்தது.

அதற்கு ஆதரவு கொடுத்திருக்கிறது தமிழ்நாடு முதலமைச்சரின் நிறுவனம்.

ஆம், அப்படத்தைத் தமிழ்நாட்டில் வெளீயிடும் உரிமையைப் பெற்றிருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம்.தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறந்தவுடன் பொருத்தமான நாளில் அப்படம் வெளியிடப்படும் என்கிறார்கள்.

இப்படத்தின் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றிருக்கிறது.

Related Posts