சினிமா செய்திகள்

மணிரத்னம் அழைப்பு சாய்பல்லவி நிராகரிப்பு

தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.அதற்கு முன்னதாக,
இளம் நாயகர்கள் நடிப்பது போன்றதொரு காதல் கதையை எழுதி வைத்துக் கொண்டு அதில் நடிக்க நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்தார் மணிரத்னம்.

அதற்காக துருவ் விக்ரம் உட்பட சில நடிகர்களிடம் பேசினார்கள். அவர்கள் யாரும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

அதனால் முற்றிலும் புதுமுகங்களை வைத்து அப்படத்தை எடுக்கத் திட்டமிட்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.அதன்பின் அந்த முடிவைக் கைவிட்டார்.

ஏனெனில், அவர் ஒரு படத்தைத் திட்டமிடும்போதே அதன் வியாபார வாய்ப்புகளையும் பார்த்தே செயல்பாட்டைத் தொடங்குவார்.

இப்போதுள்ள வியாபார சூழலில் மணிரத்னம் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படமென்றால் அதை வாங்க ஆளே இல்லையெனும் நிலை.

அதனால் சத்தமின்றி அந்தப் படத்தைக் கைவிட்டுவிட்டு கதாநாயகர்களைத் தேடினார்.

தக்லைஃப் படம் நடக்கும்போதே, சிம்புவை வைத்து ஒரு படம் மணிரத்னம் இயக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதென்றும் சொல்லப்பட்டது.

சிம்பு தொடர்ந்து வேறு படங்களில் நடிக்கவிருந்ததால் அது நடக்கவில்லை.

இப்போது, சிம்பு திட்டமிட்டபடி நடக்காமல் சில மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதால் மீண்டும் அவரை அணுகியிருக்கிறார் மணிரத்னம்.

அவரோ, முதலில் வெற்றிமாறன் படம் அடுத்தடுத்து ஏற்கெனவே அறிவித்த படங்கள் இருக்கின்றன. எனவே உடனே உங்கள் படத்தில் நடிக்கவியலாது என்று சொல்லிவிட்டாராம்.

அதன்பின்,சில கதாநாயகர்களிடம் பேசிவிட்டு அவையும் கைகூடாத நேரத்தில் விஜயசேதுபதியிடம் பேசியிருக்கிறார்.

அவர் கதை என்ன? என்று கேட்டிருக்கிறார். சிம்புவுக்காக எழுதியிருந்த கதையை விஜய்சேதுபதியிடம் சொல்ல,அவருக்கு அந்தக் கதை பிடித்துவிட்டதாம்.

உடனே, அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டாராம் மணிரத்னம்.

இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கக் கேட்டு சாய்பல்லவியை அணுகியிருக்கிறார்கள்.மணிரத்னம் படம் என்றதும் கேள்வி எதுவும் கேட்காமல் அவர் ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்த்துக் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் அவரோ, கதை என்ன? அதில் என்னுடைய பங்கு என்ன? என்பதைத் தெரிந்தபின் முடிவு சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.அதேநேரம் கதைகேட்க மணிரத்னம் அலுவலகத்துக்கு வர இயலாது.நான் சொல்லுமிடத்துக்கு வந்து கதை சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத மணிரத்னம் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.ஆனாலும் வேறு வழியின்றி தனக்கு மிக நெருக்கமான நண்பரை அனுப்பி கதை சொல்ல வைத்திருக்கிறார்.

கதையை முழுமையாகக் கேட்டுவிட்டு.இதில் எனக்கு முக்கியத்துவம் இல்லை எனவே என்னால் இந்தக்கதையில் நடிக்கவியலாது என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.

திடுக்கிட்ட மணிரத்னம் வெளியில் காட்டிக்கொள்ளாமல்,இப்போது வேறு நாயகி தேடிக் கொண்டிருக்கிறாராம்.

Related Posts