சினிமா செய்திகள்

பிரபல யூடியூப் சேனலைக் காப்பாற்றிய கலைஞர் தொலைக்காட்சி

கார்த்தி நடித்த தேவ் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பவரும், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருப்பவர் ஆர்.ஜே.விக்னேஷ்.

இவர் ப்ளாக்‌ஷீப் என்கிற இணையதள தொலைக்காட்சியை (யூ டியூப் சேனல்) நண்பர்களுடன் சேர்ந்து நடத்திவருகிறார்.

இணையத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில் புகழ்பெற்றிருக்கும் அந்நிறுவனம் தற்போது நட்டத்தில் இயங்கிவருகிறதாம்.

இதில் முதலீடு செய்திருந்த புகழ்பெற்ற நடிகர், அதைத் திருப்பிப் பெற்றுக்கொண்டதும் நிர்வாகத்தில் இருக்கும் சிலர் சுயநலத்துடன் செயல்பட்டதால் நட்டத்தைச் சந்தித்துள்ளதாம்.

இதிலிருந்து மீள்வதற்காக நிறுவனத்தை விற்பனை செய்ய முயற்சி செய்து வந்தார்களாம்.

கடந்த சில மாதங்களாக இதை விற்பதற்காகப் பலரை அணுகியிருக்கிறார்கள்.

அவர்களுடைய அந்த முயற்சி வெற்றி பெற்றிருக்கிறதாம்.

ஆம், கலைஞர் தொலைக்காட்சி அந்நிறுவனத்தை வாங்க முன்வந்திருக்கிறதாம்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து ஒப்பந்தம் கையெழுத்தாகவிருக்கிறதாம்.

அதன்பின், அந்நிறுவனம் வழக்கம்போல் செயல்படும். பணியாற்றுவோரின் ஊதியம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் பார்த்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts