கதையை மாற்றிய வெற்றிமாறன் – கடும் வருத்தத்தில் சூரி
சூரியை கதாநாயகனாக்கி வெற்றிமாறன் தொடங்கிய படம் விடுதலை.இப்படத்தில் சூரியோடு கிஷோர், பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்தார்கள். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறதெனச் சொல்லப்பட்டது.
போகப்போக இப்படத்துக்குள் விஜய்சேதுபதி வந்தார். அவர் கெளரவ வேடமொன்றில் நடிப்பதாகச் சொல்லப்பட்டது.முதலில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் நடிப்பார் என்றார்கள். அதன்பின் அது,பத்திலிருந்து பனிரெண்டு நாட்கள் வரை அவர் நடிப்பார் என்றானது.
அதற்கே, அவ்வளவு நாட்கள் நடிப்பதால் படத்தின் பெரும்பகுதியில் அவர் வருவது போல் இருக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
இப்போது நிலைமை இன்னும் மாறிவிட்டதாம். விஜய்சேதுபதி சுமார் முப்பத்தைந்திலிருந்து நாற்பது நாட்கள் வரை அந்தப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
அவர் நிறைய நாட்கள் நடிப்பதற்கேற்ப கதையிலும் மாற்றங்கள் செய்துவிட்டாராம் வெற்றிமாறன்.
அதன்விளைவு இந்தப்படத்தின் நாயகன் விஜய்சேதுபதிதான் என்றாகிவிட்டதாம். இதனால் சூரி கடும் மனவருத்தத்துக்கு ஆளாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
வெற்றிமாறன் என்கிற இயக்குநரை நம்பி என்னை முழுமையாக ஒப்படைத்தேன் அவர் எனக்கு நியாயமாக நடந்துகொள்ளவில்லையே என மிகவும் வருத்தப்பட்டுப் பேசிக்கொண்டிருக்கிறாராம்.











