கடைசிநேரத்தில் இரத்தான படப்பிடிப்பு – ஜெயம்ரவி படவரிசையில் மாற்றம்
ஜெயம்ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளன.
பொன்னியின்செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அதற்கடுத்து அவர் நடித்திருக்கும் அகிலன் படம் அவருடைய 28 ஆவது படம். இந்தப்படத்தை ஏற்கெனவே ஜெயம்ரவியை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் அகிலன் திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் உத்தமன் நடிக்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
இதற்கடுத்து, அகமது இயக்கும் புதிய படமொன்றில் ஜெயம்ரவி நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. அவருடைய 29 ஆவது படமாக உருவாகவிருந்த அப்படத்தின் படப்பிடிப்பு இந்தவாரம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கடைசிநேரத்தில் அது இரத்தாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனால், ஜெயம்ரவியின் முப்பதாவது படமாகச் சொல்லப்பட்டிருந்த இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறதாம்.
ஸ்கிரின்சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஜெயம்ரவிக்கு இணையாக கீர்த்திசுரேஷ் நடிக்கவிருக்கிறாராம். ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இதனால் ஜெயம்ரவியின் முப்பதாவது படம் இப்போது இருபத்துஒன்பதாவது படமாக மாறிவிட்டது என்கிறார்கள்.











