சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் மகள் காதல் திருமணம் – இன்று நடந்தது

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாரகுமான் திருமணம் இன்று நடைபெற்றது. ரியாசுதீன் சேக் முகமது என்பவரை மணந்திருக்கிறார்.

இவர் ஏ.ஆர்.ரகுமானிடம் சவுண்ட் இஞ்சினியராகப் பணியாற்றியவர். அங்கு பணிபுரியும்போது கதீஜாவுடன் காதல் ஏற்பட்டிருக்கிறது.

இச்செய்தியை அறிந்த ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்யச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, மிக எளிய முறையில் மிகக்குறைந்த விருந்தினர்களுடன் இன்று திருமணம் நடந்திருக்கிறது.

சென்னைக்கு அருகே உள்ள ஏ.ஆர்.ரகுமான் திரைப்பட அரங்கில் திருமண நிகழ்வு நடந்துள்ளது.

இதன்பின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை துபாய், இலண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

திருமணம் முடிந்தவுடன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் புதுமணத்தம்பதிகளுடன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவேற்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

Related Posts